Wednesday, May 8, 2013

வேப்பமரத்தின் காதலி

அவனது பளபளக்கும் பச்சைநிற கண்களை இரசித்துக் கொண்டிருந்து, 
பச்சை மஞ்சள்நிற காய்கள் அடுக்கி பல்லாங்குழி ஆடிக்களித்து,
பரந்த மார்பில் தலைசாய்த்து, சுகந்தமான மூச்சுகாற்று தாலாட்ட,
வெகுநேரம் கண்மூடி உறங்கி எழுந்து,
நேரமாகிவிட்டது என்று நான்
... வீட்டுக்கு விரைகையில்,
அருகிலிருந்த முருங்கையும், தென்னையும்,
"அதோ போகிறாள் பாரடா வேப்பமரத்தின் காதலி!"
என்று கிசுகிசுத்து கொண்டன!

No comments: